Credit: Roland Paret
Source Credit: The Pigeon Insider
அன்பார்ந்த Fanciers,
Darkening System என்பது modern young bird racing-ல் பல fanciers பயன்படுத்தும் ஒரு முக்கியமான method. இதன் முக்கிய நோக்கம் young birds-ன் body moult-ஐ control செய்வது, feather condition நல்லதாக வைத்திருப்பது, மற்றும் race season-ல் birds நல்ல form-ல் இருக்க உதவுவது.
Simple-ஆ சொன்னால், loft-க்குள் வரும் daylight-ஐ தினமும் ஒரு fixed timing-க்கு குறைப்பதே darkening system.
1. Darkening System என்றால் என்ன?
Young bird loft-ன் windows அல்லது light வரும் இடங்களை curtain, wood, plywood, tin sheet போன்றவற்றால் மூடி dark ஆக்குவது தான் darkening.
Loft உள்ளே moonlight இல்லாத இரவு போல dark ஆக இருக்க வேண்டும்.
இந்த system மூலம் young birds body feathers moult ஆகும். அதே நேரத்தில் primary flights அதிகமாக drop ஆகாமல் race season-க்கு feather condition நல்லதாக வைத்திருக்க உதவும்.
2. Loft எவ்வளவு Dark ஆக இருக்க வேண்டும்?
Loft மிகவும் dark ஆக இருக்க வேண்டும்.
ஒரு நல்ல rule:
Moonlight இல்லாத இரவு போல dark ஆக இருக்க வேண்டும்.
சிறிய holes, cracks, window gaps, ventilation gaps வழியாக light வராமல் கவனிக்க வேண்டும். Light leak இருந்தால் darkening effect குறையலாம்.
3. Ventilation மிகவும் முக்கியம்
Darkening செய்யும்போது ventilation-ஐ block செய்யக் கூடாது.
Dark loft-ல் ventilation இல்லையென்றால்:
- Heat அதிகரிக்கும்
- Dampness வரும்
- Bad air உருவாகும்
- Respiratory problem வரலாம்
- Stress அதிகரிக்கும்
Warm climate-ல் covered ventilation அல்லது power vents useful ஆக இருக்கும்.
4. தினமும் எத்தனை மணி நேரம் Daylight?
Darkening system-ல் young birds-க்கு பொதுவாக:
ஒரு நாளைக்கு 8 மணி நேர daylight
கொடுக்கப்படும்.
Example timings:
- 8:00 AM முதல் 4:00 PM வரை
- 9:00 AM முதல் 5:00 PM வரை
- 10:00 AM முதல் 6:00 PM வரை
5. Darkening எப்போது Start செய்யலாம்?
பல fanciers young birds சுமார்:
35 days old
ஆக இருக்கும் போது darkening system start செய்வார்கள்.
சிலர் 28 days-ல் start செய்வார்கள். சிலர் 50 days வரை wait செய்வார்கள். ஆனால் too late ஆக start செய்தால் primary flights drop ஆக ஆரம்பிக்கலாம்.
Darkening ஆரம்பித்த பிறகு body moult நடக்கும். Primary flights control ஆக இருக்கும்.
6. Body Moult During Darkening
Darkening ஆரம்பித்து சுமார் 2 வாரங்களில் loft-ல் body feathers விழுவது காணலாம்.
இது normal.
Young birds body moult complete ஆக சுமார்:
9 முதல் 10 வாரங்கள்
ஆகலாம்.
இந்த period-ல் birds-க்கு good feed, minerals, grit, clean water, rest, dry loft மிகவும் முக்கியம்.
7. எத்தனை வாரங்கள் Dark-ல் வைத்திருக்கலாம்?
Common period:
12 weeks
சில fanciers race schedule மற்றும் feather condition-ஐப் பார்த்து இதை அதிகமாகவும் வைத்திருக்கலாம்.
Darkening system உங்கள் club race schedule-க்கு ஏற்ப plan செய்ய வேண்டும்.
8. Darkening Period-ல் Feeding
Feeding timing உங்கள் daily routine-க்கு ஏற்ப இருக்கலாம்.
ஒரு practical method:
- Morning exercise-க்கு முன் light feed
- Loft dark செய்யும் முன் 1 மணி நேரத்திற்கு முன் feed
- Clean water always
- Grit மற்றும் minerals available
- Good quality grains
9. Exercise During Darkening
Darkening system-ல் இருந்தாலும் birds exercise செய்ய வேண்டும். Fitness build ஆக வேண்டும்.
ஆனால் over pressure கொடுக்கக் கூடாது.
Darkened young birds feather condition-ல் old birds போல தெரிந்தாலும், mind-ல் அவை இன்னும் young birds தான்.
அதனால் training-ல் panic ஆகும் chance இருக்கும்.
10. Darkening பிறகு Training Caution
Darkening system-ல் இருந்து வந்த young birds அல்லது இன்னும் dark-ல் இருக்கும் birds-ஐ train செய்யும் போது extreme care தேவை.
இவை strong feathers வைத்திருந்தாலும் confidence மற்றும் road experience குறைவாக இருக்கலாம்.
Training slow ஆக இருக்க வேண்டும்.
Important advice:
- Short tosses-ல் start செய்யுங்கள்
- Morning training நல்லது
- Distance-ஐ rush செய்யாதீர்கள்
- Bird confidence கவனியுங்கள்
- தேவைப்பட்டால் same distance repeat செய்யுங்கள்
- Bad weather avoid செய்யுங்கள்
- Heavy heat avoid செய்யுங்கள்
11. Morning Training ஏன் நல்லது?
Darkened young birds-க்கு morning training safer ஆக இருக்கும்.
காரணங்கள்:
- Temperature குறைவாக இருக்கும்
- Birds fresh ஆக இருக்கும்
- Visibility நல்லது
- Wind calm ஆக இருக்கலாம்
- Return ஆக அதிக daylight கிடைக்கும்
12. Race Season முன் Light Increase
Season முன்னேறும் போது natural daylight குறைய ஆரம்பிக்கும். அப்போது சில fanciers loft-க்குள் electric light timer மூலம் daylight hours increase செய்வார்கள்.
Common target:
14 hours daylight
இது body moult delay செய்யவும் race condition maintain செய்யவும் உதவும்.
Later lights off செய்த பிறகு, சில நாட்களில் birds complete body moult start செய்யலாம்.
13. Race Season முடிந்த பிறகு Care
Race season முடிந்து moult start ஆன பிறகு birds-க்கு extra care தேவை.
Moult period-ல்:
- Good quality grains கொடுக்க வேண்டும்
- தேவைப்பட்டால் twice daily feeding
- Minerals and grit
- Plenty of rest
- Hard exercise limit செய்யுங்கள்
- Loft calm and dry ஆக இருக்க வேண்டும்
14. Avoid செய்ய வேண்டிய Mistakes
இந்த mistakes avoid செய்யுங்கள்:
- Darkening செய்யும்போது ventilation block செய்யாதீர்கள்
- Light leaks விடாதீர்கள்
- Training distance suddenly அதிகரிக்காதீர்கள்
- Bad weather-ல் train செய்யாதீர்கள்
- Young bird loft overcrowd செய்யாதீர்கள்
- Moult period-ல் poor feeding செய்யாதீர்கள்
- Moult time-ல் birds-ஐ unnecessary move செய்யாதீர்கள்
- Young birds old birds மாதிரி behave செய்யும் என்று எதிர்பார்க்காதீர்கள்
Darkening System young bird racing-க்கு மிகவும் useful ஆக இருக்கும். இது feather condition control செய்யவும், race season-ல் birds நல்ல condition-ல் இருக்கவும் உதவும்.
ஆனால் சரியாக manage செய்யவில்லை என்றால் losses, stress, health problems வரலாம்.
Best result கிடைக்க வேண்டுமென்றால் balance தேவை:
Correct darkness + good ventilation + proper feeding + slow training + low stress = better young bird racing condition.
Credit: Roland Paret
Source Credit: The Pigeon Insider
Regards,
KPRF Committee
Keelakarai Pigeon Racing Federation